search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரமுகர் கைது"

    • பா.ஜ.க. பிரமுகர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 38) இவர் பாஜக கட்சியில் உறுப்பினராக இருந்து வருகின்றார்.

    இவர் கடந்த 23-ந் தேதி சமூக வலைதளத்தில் (பேஸ்புக்) வீடியோ ஒண்றுக்கு கமாண்ட் பன்னி தமிழ்நாடு முதலமைச்சர், மற்றும் அவரின் குடும்பத்தாரை இழிவு படுத்தி அனுப்பியுள்ளார்.

    இதனைப்பார்த்த ஒடுகத்தூர் தி.மு.க. பிரமுகர் பெருமாள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்து வேப்பங்குப்பம் போலீசார் தலைமறைவாக இருந்த விமல்குமாரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஒடுகத்தூரில் சுற்றி திரிந்த விமல்குமாரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் ஒடுகத்தூரில் சர்சையை ஏற்படுத்தியது.

    • டிப்பர் லாரிகளில் மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
    • சீனிவாசன் ராமசாமியை சட்டையை பிடித்து இழுத்து கையில் தாக்கியுள்ளார்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே உள்ள சேவகானப்பள்ளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக ராமசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில், சேவகானப்பள்ளி அருகே உள்ள கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் (46) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமிக்கு போன் செய்து அங்குள்ள கல்குவாரி மற்றும் அந்த வழியாக செல்லும் டிப்பர் லாரிகளில் மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து சீனிவாசன் சிட்டா அடங்கள் சம்பந்தமாக, கிராம நிர்வாக அலுவலருக்கு போன் செய்துள்ளார், அப்போது கிராம நிர்வாக அலுவலர் தான், தாசில்தார் அலுவலகத்தில் பணியில் உள்ளதாகவும், நாளை அலுவலகத்திற்கு வாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

    அதன் பின்னர் நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படவே சீனிவாசன் ராமசாமியை சட்டையை பிடித்து இழுத்து கையில் தாக்கியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி ஓசூர் தாசில்தார் கவாஸ்கருக்கு தகவல் தெரிவித்தார், அதனைத்தொடர்ந்து அவர் பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தி.மு.க. பிரமுகர் சீனிவாசனை கைது செய்தனர்.

    ×